youthpluz
 Home  |  விமர்சனம்

ரெமோ படத்தின் காமெடியான விமர்சனம் !!

ரெமோ படத்தின் காமெடியான விமர்சனம் !!

ஜெட் வேகத்தில் வளர்ந்துவரும் சிவகார்த்திகேயனின் அடுத்த வரவு ‘ரெமோ’. குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நட்சத்திரங்களின் படங்களைப்போல, அதிகாலை சிறப்புக்காட்சிகள் போடும் அளவிற்கு ‘ரெமோ’வுக்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. ‘ரெமோ’ படம் அந்நியனா...? அம்பியா...?

கதை:

சினிமாவில் நடிகராக வேண்டும் என ஆசைப்படும் சிவகார்த்திகேயன், டாக்டரான கீர்த்தி சுரேஷை கண்டதுமே காதலில் விழுகிறார். மறுநாளே தன் காதலை கீர்த்தியிடம் சொல்வதற்காக அவரின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கீர்த்திக்கும் வேறொருத்தருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் விரக்தியில், தன் கவனத்தை நடிப்பின்மீது திருப்புகிறார். ஒரு படத்தில், ஹீரோவுக்கு ஆணாகவும், பெண்ணாகவும் நடிக்க வேண்டிய சூழல் என்பதால், ஒரு பெண்ணாக கெட்அப் சேஞ்ச் செய்து நர்ஸ் வேடத்தில் சான்ஸ் கேட்க செல்கிறார். அது ஓ.கே. ஆகி, வீடு திரும்பும்போது, பஸ்ஸில் மீண்டும் கீர்த்தியைப் பார்க்கிறார். சிவகார்த்திகேயனை நர்ஸ் என்ற நம்பிவிடும் கீர்த்தி, தான் வேலைபார்க்கும் மருத்துவமனையிலேயே அவருக்கு நர்ஸ் வேலையும் வாங்கிக் கொடுக்கிறார்.

தனக்கான வாய்ப்பு மீண்டும் ஆரம்பித்திருப்பதாக நம்பும் சிவகார்த்திகேயன், அதன்பிறகு அந்த நர்ஸ் வேடத்திலேயே கீர்த்தி சுரேஷின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயல்கிறார். இதன் பிறகு என்னென்ன நடக்கின்றன என்பதை கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சென்டிமென்ட், நிறைய ரொமான்ஸ் கலந்து ‘ரெமோ’வாக்கியிருக்கிறார்கள்.

படத்தை பற்றி ஒரு பார்வை:

நிச்சயமான பெண்ணை காதலிக்கும் ஹீரோ, அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை ஒரு கெட்டவன்... என்ற இந்த அரதப்பழைய ஒரு கதையை கையிலெடுத்து, அதில் ‘அவ்வை சண்முகி’ பாணியில் ஹீரோவிற்கு பெண் கெட்அப்பை கொடுத்துவிட்டால் ‘ரெமோ’ ரெடி!

குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கக்கூடிய ஒரு என்டர்டெயின்மென்ட் ஹீரோ, ஒரு நல்ல டெக்னிக்கல் டீம், ஒரு படத்தை எதிர்பார்க்க வைக்கக்கூடிய அளவுக்கு திட்டமிடப்பட்ட விளம்பரங்களைச் செய்யும் தயாரிப்பு நிறுவனம் என இத்தனை பெரிய விஷயங்கள் ஒரு அறிமுக இயக்குனருக்கு கிடைப்பதென்பது எத்தனை பெரிய வாய்ப்பு. ஆனால், அந்த வாய்ப்பில் ஒரு இயக்குனராக தன் முத்திரையை தனியாக பதிக்கத் தவறியிருக்கிறார் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.

டெக்னிக்கல் விஷயங்களைத் தாண்டி ‘ரெமோ’வை ரசிக்க முடிவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று துறுதுறு சிவகார்த்திகேயன், இன்னொன்று அழகு தேவதை கீர்த்தி சுரேஷ். ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை அழகாக ஜொலிக்கிறார் கீர்த்தி. அதற்கு முக்கிய காரணம் பி.சி.ஸ்ரீராமின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு. ‘செஞ்சிட்டாளே..,’ ‘ரெமோ நீ காதலன்...’ ஆகிய பாடல்களில் அனிருத் அசத்தியிருக்கிறார். பின்னணி இசையும் ஓகே!

படம் நெடுக சிரிக்க வைக்கவில்லையென்றாலும்... யோகிபாபு, சதீஷ் ஆகியோரின் பங்களிப்புடன் ஆங்காங்கே கலகலப்பூட்டியிருக்கிறார்கள். இருந்தாபோதும், சிவகார்த்திகேயன் படத்திற்கே உரிய ஹ்யூமர் இதில் சற்று குறைவே.

நடிகர்கள் ஒரு பார்வை:

நடிப்பிலும் சரி, டான்ஸ், ஃபைட் என மற்ற ஏரியாக்களிலும் சரி ஒரு ஹீரோவாக அடுத்தடுத்த படத்தில் விறுவிறு வளர்ச்சியை எட்டி வருகிறார் சிவா. அதிலும் இப்படத்தில் இரண்டு கெட்அப்களிலும் அவரின் பங்களிப்பு அற்புதம். ஆனால், அவரின் வழக்கமான டைமிங் காமெடிகள் கொஞ்சம் மிஸ்ஸாவது மட்டுமே குறை. பளிச் புன்னகையுடன், சிரித்த முகத்துடன், கண்ணுக்கு அழகாக படம் முழுக்க வருகிறார் ஹீரோயின் கீர்த்தி. அவரின் கதாபாத்திர வடிவமைப்பில் பெரிய கவனம் செலுத்தப்படவில்லையென்றாலும், தன் பங்கு வேலையை சரியாகவே செய்திருக்கிறார். மெட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சதீஷ் ஆகியோர் ரசிகர்களை ஆங்காங்கே ரிலாக்ஸ் செய்கிறார்கள். துறுதுறு அம்மா கேரக்டரில் வழக்கம்போல் ஸ்கோர் செய்து அசத்தியிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். கீர்த்தி சுரேஷுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக வருபவர்தான், படத்தில் ரொம்ப பாவம். ரசிகர்கள் பார்த்து, சலித்துப் புளித்துபோன வில்லன் கதாபாத்திரத்தில் அவர் மட்டும் பெரிதாக என்ன செய்துவிடமுடியும்?

பிளஸ்:

1. பி.சி.ஸ்ரீராமின் அற்புதமான ஒளிப்பதிவு
2. காஸ்ட்யூம், மேக்அப் உட்பட அனைத்து டெக்னிக்கல் விஷயங்கள்
3. சிவகார்த்திகேயனின் டெடிகேஷன்

மைனஸ்:

1. கதை
2. திரைக்கதை

மொத்தத்தில்...

சிவகார்த்திகேயன் ஸ்டைல் ஹ்யூமர் சற்று குறைவாக இருந்தாலும், ஒரு ரொமான்டிக் ஹீரோவாக அவரின் இந்த ‘ரெமோ’ அவதாரம் ரசிகர்களுக்கு பிடிக்க வாய்ப்பிருக்கிறது. டெக்னிக்கல் டீமின் உழைப்பிற்காக ‘ரெமோ’வுக்கு ஒரு சல்யூட்!

ஒரு வரி பஞ்ச்: ஆச்சரியமில்லை... ஆனாலும் ரசிக்கலாம்!

  07 Oct 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தேவி படத்தின் பேய் மிரட்டல் விமர்சனம் !!
ரெமோ படத்தின் காமெடியான விமர்சனம் !!
றெக்க படத்தின் அதிரடி கலட்டா விமர்சனம் !!
எம் எஸ் டோனி படத்தின் மெகா ஹிட் விமர்சனம் !!
விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்தின் பார்க்கலாம் என்கிற விமர்சனம் !!
தனுஷ் நடித்த தொடரி படத்தின் பிரம்மிக்க வைக்கும் விமர்சனம் !!
சதுரம் 2 படத்தின் விமர்சனம்....!!
நாயகி படத்தின் அசத்தலான விமர்சனம் !!
இருமுகன் படத்தின் விமர்சனம் !!
கிடாரி படத்தின் விமர்சனம் !!