youthpluz
 Home  |  மற்றவை

மொபைல் நம்பர் கொடுக்காமல் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்தலாம் அதுக்கான வழிமுறைகள் !!

மொபைல் நம்பர் கொடுக்காமல் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்தலாம் அதுக்கான வழிமுறைகள் !!

ஃபேஸ்புக் என்பது ஒரு சமூக வலைத்தளம். உலகின் அதிக மக்கள் தொகை உள்ள் நாடு சீனா, இந்தியா என்பது அனைவருக்கு தெரியும். இதனை அடுத்து அதிக மக்கள் தொகை உள்ளது ஃபேஸ்புக்கில்தான்.

ஆம் உலகின் மூன்றாவது மக்கள் தொகை அதிகம் கொண்டது ஃபேஸ்புக் என கூறலாம். அந்த அளவுக்கு உலகில் உள்ள பல நாடுகளில் கோடிக்கணக்கான நபர்கள் ஃபேஸ்புக்கில் இருக்கின்றார்கள். ஃபேஸ்புக்கில் இருக்கின்றார்கள் என்று சொல்வதை விட அதற்கு அடிமையாக இருக்கின்றனர் என்றே கூறலாம்.

ஆனால் அதே நேரத்தில் நமது ஃபேஸ்புக் பக்கத்தை நம்முடைய பர்சனல் விபரங்களையும் கோடிக்கணக்கானோர் பார்க்க வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் நமது பர்சனல் விபரங்கள் பகிரப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நமது பிரைவசிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட நமது செல்போன் எண் பலருக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்பதை நினைத்து பாருங்கள்.

எனவே ஃபேஸ்புக்கில் நமது பர்சனல் மொபைல் எண்ணையோ அல்லது அலுவலக எண்ணை பதிவு செய்தால் நமது பிரைவசி நிச்சயம் பாதிக்கும் என்ற சந்தேகம் இருந்தால் உங்களுக்காக போன் நம்பர் இல்லாமல் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட ஆரம்பிப்பது எப்படி என்பதை நாங்கள் உங்களுக்கு கற்று தருகிறோம். நாங்கள் கூறும் ஒருசில எளிய வழிகளை நீங்கள் போன் நம்பர் இல்லாமல் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 1: ThrowAway Mail என்ற இமெயிலை பயன்படுத்துங்கள்

நீங்கள் நடைமுறையில் எத்தனனயோ இமெயில் ஐடிக்களை உபயோகித்து வந்தாலும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒப்பன் செய்வதற்காக ThrowAway Mail இணையதளத்திற்கு சென்று ஒரு தற்காலிக இமெயிலை ஆரம்பித்து கொள்ளுங்கள். பின்னர் இந்த இமெயில் அக்கவுண்ட்டை காப்பி செய்து வைத்து கொள்ளவும்.

ஸ்டெப் 2: ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்யுங்கள்

ThrowAway Mail ஆரம்பித்தவுடன் ஃபேஸ்புக் பக்கம் சென்று உங்களுக்கான ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய விபரங்களை பதிவு செய்யும்போது இமெயில் ஐடி என்ற இடத்தில் ஏற்கனவே காப்பி செய்து வைத்திருந்த ThrowAway Mail ஐடியை பேஸ்ட் செய்யவும். தற்போது நீங்கள் ThrowAway Mail ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் செய்துவிட்டீர்கள்.

ஸ்டெப் 3: போன் நம்பர் கேட்கும் ஆப்சனை ஸ்கிப் செய்துவிடுங்கள்:

பேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் செய்த பின்னர் உங்களிடம் ஃபேஸ்புக், உங்களுடைய மொபைல் நம்பரை கேட்கும். உங்கள் அக்கவுண்ட் குறித்த தகவல்களை பெறுவதற்கும், உங்கள் அக்கவுண்ட் பாஸ்வேர்டு மறந்துவிட்டாலும் இந்த போன் நம்பர் உதவும். ஆனால் இதை நீங்கள் இப்போது ஸ்கிப் செய்துவிடலாம்.

ஸ்டெப் 4: எப்படி வெரிபிகேஷன் செய்வது?

ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் செய்தவுடன் போன் நம்பர் மூலம்தான் வெரிபிகேசன் நம்பர் வரும். ஆனால் நாம் போன் நம்பர் ஆப்சனை ஸ்கிப் செய்துவிட்டதால் அதற்கு பதிலாக உங்களுடைய ThrowAway Mail முகவரிக்கு வெரிபிகேசன் எண் வரும். நீங்கள் மீண்டும் மெயில் ஐடிக்கு சென்று வெரிபிகேசன் நம்பரை ஃபேஸ்புக் அக்கவுண்டில் பதிவு செய்து உங்களுக்கான ஃபேஸ்புக் ஐடி, போன் நம்பர் இல்லாமலேயே கிடைத்துவிடும். உங்கள் போன் நம்பரை பலர் தெரிந்து கொண்டு டார்ச்சர் செய்வார்களோ என்ற பயமே இப்போது உங்களுக்கு ஏற்படாது.

  05 Oct 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
மொபைல் நம்பர் கொடுக்காமல் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்தலாம் அதுக்கான வழிமுறைகள் !!
20,30 வயதில் இருக்கும் மக்களே இன்னறைய இதய நோயை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் இப்போது அது உங்களுக்கும் வரலாம் !!
டோனிக்கு பிடித்த தமிழ் நடிகர்களில் இவரும் ஒருவர் சந்தோஷ்த்தில் இவர் ரசிகர்கள் !!
ஓகே கூகுள் விஷயங்கள் !!
அலுவலுக்கதையும் வீட்டையும் சரிசமமாக கவனிப்பது எப்படி !!
விநாயகரின் அருமை !!
எந்த பாத்திரத்தில் சமைத்தால் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று பாருங்கள் !!
இரவில் கெட்ட கனவு தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம் !!
ரவை போண்டா நல்லது மாலை செய்து சாப்பிட்டுப் பாருங்கள் !!
பென் டிரைவில் உள்ள விஷயங்கள் அழிந்து விட்டால் செய்ய வேண்டியவை !!