youthpluz
 Home  |  விமர்சனம்

தனுஷ் நடித்த தொடரி படத்தின் பிரம்மிக்க வைக்கும் விமர்சனம் !!

தனுஷ் நடித்த தொடரி படத்தின் பிரம்மிக்க வைக்கும் விமர்சனம் !!

இன்னறை நிலையில் தனுஷ் கட்டாயம் ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உள்ளார். இதற்காகவே வெற்றி இயக்குனர் பிரபு சாலமனிடம் கைக்கோர்த்த படம் தான் தொடரி. பல மாதங்கள் கிடப்பில் இருந்த இந்த படம் இன்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் ரிலிஸ் ஆகியுள்ளது.

கதை:

தனுஷ் ரயிலில் கேண்டின் பாயாக வேலை செய்ய, அதே ரயிலில் ஒரு ஹீரோயினின் டச்சப் கேர்ளாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். பிரபு சாலமன் படம் என்றாலே பார்த்தவுடன் காதல் தீப்பிடிக்க, அதன் பிறகு ‘என் உடம்புக்குள்ள புகுந்து என் உசுர எடுத்துட்ட’ன்ற வசனத்துடன் ஒரு காதல் வரும், அதே காதல் தான் இதிலும்.

கீர்த்தி சுரேஷிற்கு பெரிய பாடகி ஆக வேண்டும் என்று ஆசை. இவருடைய ஆசையை தெரிந்த தனுஷ் நெருங்கி பழக விருப்பப்பட்டு, எனக்கு வைரமுத்துவை தெரியும் என்று பொய் சொல்லி பழகுகிறார்.

ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து இருவரும் பிரிய, அதே நேரத்தில் என்ஜின் மாஸ்டர் நெஞ்சு வலியில் இறக்க, ரயில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றது.

அதன்பின் தனுஷ்-கீர்த்தி சுரேஷ் ஜோடி காதல் சேர்ந்ததா? அந்த ரயில் நின்றதா? என்பதை சீட்டின் நுனிக்கு கொண்டு வருகிறது திரைக்கதை.

படத்தை பற்றி பார்வை:

தனுஷ் பூச்சியப்பனாகவும், கீர்த்தி சுரேஷ் சரோஜாவாகவும் வாழ்ந்து இருக்கிறார்கள். அதிலும் தனுஷ் படம் முழுவதுமே கலகலப்பாகவே வந்து செல்கிறார். கீர்த்தி சுரேஷும் இறக்கும் நிலையிலும் நான் பாட்டு பாடவா? என கேட்பது திரையரங்கையே அதிர வைக்கின்றது.

படத்தின் முதல் பாதியில் பெரிதும் கதை இல்லை என்றாலும், தம்பி ராமையா, கருணாகரன் டீம் காமெடி கரை சேர்க்கின்றது. தனுஷும் தன் பங்கிற்கு காமெடியில் கலக்க, கீர்த்தி பாடுகிறேன் என்று செய்யும் கலாட்டா சிரிப்பிற்கு புல் கேரண்டி.

அதே நேரத்தில் 3 படத்தில் வரும் தனுஷ் போல் ஒரு கமேண்டோ. அதிலும் மலையாளி, தமிழர்களையே பிடிக்காது என்று கூறி தனுஷை பார்க்கும் போதெல்லாம் முறைப்பது, அவரை தனுஷ் மந்திரி ராதாரவியுடன் கோர்த்துவிட்டு பதிலடி கொடுக்கும் ரகம் எல்லாம் செம்ம.

முதல் பாதி இடைவேளை வரும்வரை படம் எதை நோக்கி செல்கின்றது என்றே தெரியவில்லை, காமெடி மட்டும் உதவ, இரண்டாம் பாதியில் ரயில் நிற்குமா? பூச்சியப்பன்- சரோஜா இணைவார்களா? என ஓவ்வொரு ஆடியன்ஸையும் சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றது.

அதிலும் அந்த பாலத்தை கடக்கும் காட்சி பதட்டத்தை இரண்டு மடங்காக்குகின்றது, அதே நேரத்தில் தொலைக்காட்சி மீடியாக்களை பிரபு சாலமன் வெளுத்து வாங்கிய காட்சி செம்ம தைரியம் சார் உங்களுக்கு.

டி.இமானின் இசையில் மைனா, கும்கி, கயல் எல்லாம் சேர்ந்த புருட்சால்ட் தான் இசை, ஒளிப்பதிவு கவனிக்க வைக்கின்றது, சிஜி காட்சிகள் கொஞ்சம் தெரிந்தாலும் கொடுத்த பட்ஜெட்டில் ஓகே தான்.

பிளஸ்:

படத்தின் இரண்டாம் பாதி, திரைக்கதை, காமெடி காட்சிகள்.

கிளைமேக்ஸ் என்ன ஆகும் என்று ஆடியன்ஸை நகம் கடிக்க வைப்பது ரசிக்க வைக்கின்றது.

மைனஸ்:

தனுஷே ரயில் மேல் ஏறி உதவும் போது, ரயிலில் இருக்கும் போலீஸ் மேலே ஏறி உதவலாமவே? என சில லாஜிக் கேள்விகள் எழுகின்றது. மிகவும் பதட்டமான காட்சியில் கூட காமெடி ஓகே என்றாலும், தேவை தானா?

மொத்தத்தில் தொடரி சந்தோஷமான, த்ரில்லிங்கான ஒரு முழு நிறைவு பயணம்.

  22 Sep 2016
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தேவி படத்தின் பேய் மிரட்டல் விமர்சனம் !!
ரெமோ படத்தின் காமெடியான விமர்சனம் !!
றெக்க படத்தின் அதிரடி கலட்டா விமர்சனம் !!
எம் எஸ் டோனி படத்தின் மெகா ஹிட் விமர்சனம் !!
விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்தின் பார்க்கலாம் என்கிற விமர்சனம் !!
தனுஷ் நடித்த தொடரி படத்தின் பிரம்மிக்க வைக்கும் விமர்சனம் !!
சதுரம் 2 படத்தின் விமர்சனம்....!!
நாயகி படத்தின் அசத்தலான விமர்சனம் !!
இருமுகன் படத்தின் விமர்சனம் !!
கிடாரி படத்தின் விமர்சனம் !!