youthpluz
 Home  |  செய்திகள்

விஜய்61 சினிதுறையில் கிசுகிசுப்படுகிறது என்னவென்றால் !!

விஜய்61 சினிதுறையில் கிசுகிசுப்படுகிறது என்னவென்றால் !!

நடிகர் விஜய் தற்போது தனது 60-வது படமாக பரதன் இயக்கும் ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்து கோலிவுட்டில் பரவலாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அதன்படி, விஜய் அடுத்ததாக ‘தெறி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. கூடவே, செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்திலும் விஜய் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் விஜய்யை சந்தித்த செல்வராகவன், அவருக்கு ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை பிடித்துப்போய் அதில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விஜய்-செல்வராகவன் கூட்டணி இணைந்தால் கண்டிப்பாக அந்த படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

செல்வராகவன் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக பணியாற்றி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சந்தானம்-ரெஜினா நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கவிருக்கிறார். இதையடுத்து, விஜய் படத்தை செல்வராகவன் இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

  07 Sep 2016
User Comments
07 Sep 2016 15:20:04 aravind said :
விஜய் அண்ணா நடிப்பு நல்ல இருக்கு
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
ஷாருக் ரகசிய தொடர்பு!!.......ஷாருக் பெருமை தன் மனைவியை பற்றி ..........
அஜித்தை புகழ்ந்து திரையுலகில் பெரிதும் எடுத்துரைக்கும் வேதாளம், தெறி படங்களில் இருந்த நபர் !!
விஜய் படங்கள் தான் மக்கள் பிரச்சனையை பேசும் படங்கள் பைரவாவும் அப்படி பேசுகிற படமாம் !!
திஸ் இஸ் மை கேம் விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி நடிக்க உள்ளார் !!
அஜித் விஜய் பற்றி கூறிய நடிகர் சிவகார்த்திக்கேயன் ரெமோ படத்தின் விழாவில் !!
இளைய தளபதி படத்துக்கு வரும் பிரச்சனைகள் ரசிகர்களால் இனி வரும் படங்கள் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கும் ?
தல அஜித்க்கு திரை பயணங்களில் தல57 படம் திருப்புமுனையாக அமையுமாம் !!
சூப்பர் ஸ்டார் விஜய் என புகழ்ந்த நாளிதழ் ஒரு காலத்தில் விஜய்யை என்ன கேலி செய்தது தெரியுமா ?
பைரவா படத்துக்கு போடப்படும் பிரம்மாண்ட செட் ஷூட்டிங்யில் அசத்தும் நடன கலைஞர்கள் !!
தீபாவளிக்கு விருந்து வைக்கும் தல கொண்டத்தில் ரசிகர்கள் !!